In மரப்பசு

மரப்பசு க்வென்டின் மடோனா Like a Virgin

“Genius is finding the invisible link between things.” ― Vladimir Nabokov

ஒரு முறை ‘மரப்பசு’ பற்றி எழுதிய பொழுது - நான் அந்தக் கதையைப் புரிந்து கொண்ட விதத்தைப் பற்றி சித்தார்த் ‘கருப்பு/வெள்ளை’ யாக விஷயத்தைப் புரிந்து கொள்ளக் கூடாது என்று சொன்ன நினைவு.

நான் இதைப் பற்றி ஒரு தனிப்பதிவெழுத வேண்டும் என்று நினைத்து அப்பொழுது விட்டிருந்தேன். django unchained பார்த்தப் பிறகான இன்னொரு முறை பார்க்கலாம் என்று ஆரம்பித்துப் பார்த்த Quentin படங்களின் தொடர்ச்சியாய் ‘Reservoir Dogs' ஆரம்பக் காட்சி மீண்டும் மரப்பசு பக்கம் என்னைத் தள்ளியது.




என் கருப்பு/வெள்ளை கருத்திற்கு இது காரணமாக இருந்திருக்க முடியுமா தெரியாது, ஆனால் Quentin சொல்லும் ‘Like a virgin' கதை தான், நான் ‘மரப்பசு’ படித்ததும் உணர்ந்தது. Madonna, Quentin : Its not dick its love என்று சொல்லியிருந்தாலுமே, அட நம்மள மாதிரியே யோசிக்கிற ஒரு ஆள் என்று நினைக்க வைத்தது.

ஆன்டன் செக்காவ், ஒரு முறை டால்ஸ்டாய் சொன்ன ‘worse than Shakespeare’ க்கு சந்தோஷப்பட்டதாய் கேள்விப்பட்டிருக்கிறேன். இதுவும் அப்படித்தான். 'Worse like Quentin' ;)



மரப்பசு பற்றி முன்னம் எழுதியது, கூகுள் பஸ்ஸில்.


நான் மரப்பசு பற்றிப் புரிந்துகொண்டதை அத்தனை பொதுவில் போடமுடியாதென்று நினைத்து வந்திருக்கிறேன். நான் மரப்பசு படித்த பொழுது மோகமுள் படித்திருக்கவில்லை, அதனால் எனக்கு உங்களுக்கு வந்த குழப்பம் இல்லை. 
ரொம்ப ராவா நான் உணர்ந்ததைச் சொல்லணும்னா, அவள் உச்சத்தைத் தேடி அலைபவளாய் இருக்கிறாள் என்றே நான் நினைத்தேன். அவளுக்கு அதுவரை கிடைத்திடாத ஒன்று கிடைத்ததும்(ஆப்பிரிக்கனுடான உறவு) எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவள் தான் தேடியது கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் முடிக்கிறாள் என்று நினைக்கிறேன். அம்மணி கடைசியில் இந்தியா வந்து செட்டில் ஆவதுடன் கதை முடியும் என்று நினைக்கிறேன். 
ஜெமோவுடன் ஒரு நாள் பேசிக்கொண்டிருந்த பொழுது இந்தக் கதைக்கான இன்னொரு திறப்பு கிடைத்தது. வெளியில் சொல்ல முடியாததற்கு வருந்துகிறேன் ;)


XXX, இல்லை எனக்குமே கூட அப்படிப் பொதுவில் சொல்ல கூச்சமாக இருந்தது, ஆனால் தற்சமயங்களில் இத்தகைய ஸ்டாண்ட்களில் இருந்து நானே விலகிக் கொள்ள யத்தனிக்கிறேன் அதன் விளைவே மேற்சொன்ன பத்தி. 
கோபாலி அம்மணியை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தார், ஆனால் அம்மணியின் திருப்தி இங்கே கேள்விக்குரியானது. சிஷ்யனான பட்டாபியுடன் அவள் தங்கிவிடுகிறாள் ஆமாம் அவளுடைய தேடல் முடிவடைந்தது அதனால் அவள் அவனுடன் தங்கிவிடுகிறாள், கதையைப் படித்தாள் அவள் பட்டாபியுடன் தங்குவதற்கு வேறு எந்த காரணமும் இருக்க முடியாது. அவன் அவளை நன்றாய்ப் பார்த்துக் கொள்வான் அவளுக்கென்று ஒரு சொந்தம் என்பதைத் தவிர. அவள் Sexually satisfied என்ற நிலைமை வந்ததும் அவளுக்கு உறவு பற்றிய ஒரு பயம் அவளை பட்டாபியுடன் இருக்க விடுகிறது என்று படுகிறது.
ஐரோப்பியனா என்பது நினைவில் இல்லை, படித்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. அவனுடன் அம்மணி கொஞ்சம் நாள் இருப்பாள், ஆனால் அந்த நிகழ்வு - அவனுடனான உடலுறவு - நிகழ்ந்ததும் அவள் சொல்லும் வசனங்கள் தான் நான் இந்த முடிவுக்கு வர வசதியாய் இருந்தது. இன்னொரு தரம் படித்துவிட்டு விளக்கமாய் எழுதுகிறேன். அந்த உறவு அவளே விரும்பி எடுத்துக்கொண்ட கற்பழிப்பு போல் அமையும் என்று நினைக்கிறேன். 
ப்ளாக் அண்ட் வொயிட்டாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்று அப்படிச் சொல்லவில்லை, ஆனால் நான் உணர்ந்ததை அது ப்ளாக் அண்ட் வொயிட்டாக இருந்தாலும் சொல்கிறேன்னு வைச்சுக்கோங்களேன் ;)

Related Articles

0 comments: