Featured Post

தமிழில் போர்னோகிராஃபி இருக்கிறதா என்ன?

இன்று டிவிட்டரில் ஸ்ரீதர் நாராயணன் என்னிடம்,  “@ mohandoss சில எல்லைகளை அநாயசமா கடந்து எழுதறீங்க. ஆனா, எதுக்கு எழுதனும்கிற நோக்கமும...

Wednesday, June 30, 2010

தொடர்ச்சியற்ற எண்ணங்கள்

செப்புப்பட்டயம் என்கிற பெயரில் எழுதிக் கொண்டிருந்த என் பதிவுகளை Being Mohandoss என்று மாற்றியிருக்கிறேன்.

ஜெர்மனி உலகக்கோப்பை கால்பந்தில் காலிறுதி வரை வந்ததிருக்கிறது. Klose 12 கோல்களுடன் பீலேவுடன் சமநிலையில், இன்னும் வந்திருக்க வேண்டும். ரெட் கார்ட் கொடுத்த மேட்சும் அதற்காக விளையாடாமல் போன அடுத்த மேட்சும் தடுத்துவிட்டது. ஆனால் என்ன பைனல்ஸ் வரை ஆடினால் 15 நிச்சயம் வரும்.

ஒரு வாரமாய் மத்திய பெங்களூரில் இருந்து விளிம்பு வொய்ட் பீல்ட் சென்று வரும் பொழுது மக்களின் டிரைவிங் ஹெபிட்ஸ் பற்றி நிறைய யோசித்தேன். ரோட்டில் வண்டி ஓட்டுவதில் பெரும்பிரச்சனை வருவது இரண்டு நபர்களால் ஒன்று By default: பெண்கள். மற்றையது நடுவயது ஆண்கள். இவர்கள் இளைஞர்களாகவும் இல்லாமல் முதியவர்களாகவும் இல்லாமல் இருப்பதால் பிரச்சனை, விட்டுத் தர முடியாத பிரச்சனை, ஓட்டிக் கொண்டிருக்கும் வண்டியை ‘ரோட்டின் ஆவரேஜ்’ வேகத்தில் ஓட்ட முடியாததும் அப்படி ஓட்டுபவர்களுக்கு இடம் கொடுத்து ஒதுங்க முடியாததுமான ஈகோ பிரச்சனை. பெண்ணாகப் பிறந்திருக்கலாம், ரோட்டில் வண்டி ஓட்டிக் கொண்டு வந்தால், நாய் முதற்கொண்டு, பக்கத்தில் வர பயப்படுகிறது. ஆராமாய் வீட்டிற்குப் போகலாம். காசிறுக்கிறது என்று ஸ்கார்ப்பியோ ஓட்டும் பெண்களால் அலறிக் கொண்டிருக்கிறது பெங்களூர் ரோடுகள். அன்றைக்கு சிக்னல் ஒன்றில் ஸ்கார்ப்பியோவின் ரிவ்யூ மிரரில் லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டிருந்த பெண்ணைப் பார்த்தேன். என்ன தவம் செய்தனை, ஸ்கார்ப்பியோ!

பெங்களூரில் பிரா அணியாமல் ஆடை அணியும் பெண்களை சாலையோரத்தில் பார்க்கும் பொழுது தானாய்த் திரும்பும் கண்களை கட்டுப்படுத்த வேண்டியிருக்கிறது. கல்யாணமாகிவிட்டதும் நம் கண்கள் எங்கே திரும்புகிறது என்று பார்ப்பதற்காகவே பின்னால் உட்கார்ந்து வரும் மனைவி திரும்பியதைக் கவனித்து, கவனித்ததை கவனித்து அன்றிரவுக்குள் subtleஆக ஆப்படிப்பதால். இப்பொழுதெல்லாம் தலையைத் திருப்பாமல் ரசிக்கக் கற்றுக் கொண்டுவிட்டேன், மனைவிக்கு இந்தப் பதிவை படித்துக் காட்டாமல் இருக்கணும்.

Monday, June 21, 2010

ராவன்

எனக்குப் பிறக்கப்போகும் பையனுக்கு ராவணன்னு பெயர் வைப்பேன்னு தலைகீழா நிற்கிற ஆள் ராவணன் படத்திற்கு போகாமல் இருந்திருந்தால் தான் ஆச்சர்யம், ஆனால் நான் ராவனுக்குப் போனேன். எல்லாம் பெங்களூர் மல்டி ப்ளக்ஸுகள் செய்து சோதனை.

படம் நடக்கிற சூழல் இந்திக்கு பிரச்சனையில்லை. படத்தின் மிகப்பெரிய பிரச்சனை ஐஸ்வர்யா ராய், இந்த அத்தைக்கு நடிக்கத் தெரியாது என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்பும், மணிரத்னம் போன்றவர்கள் விளம்பர அடையாளத்திற்காக இவர் பின் தொங்குவது கொடுமை.

படத்தில் இவருடைய க்ளோசப்பு காட்சிகள் நம்மை அப்புகின்றன. ஐஸ்வர்யா ராய்க்கு தகுதியான படம் எந்திரனாகத்தான் இருக்க முடியும், இரண்டு சாங், கொஞ்சம் அழுகை, கொஞ்சம் காதல் வகையறா தான் ஐஸ்வர்யா ராய் செய்ய முடியும். உணர்ச்சியற்ற இவர் முகம் படத்தில் தேவைப்படும் subtle ஆன எதையும் செய்ய இயலவில்லை.

இந்திப் படத்தில் நன்றாய் பெயர் வாங்குவது ரவி கிஷனும், கோவிந்தாவும் தமிழில் கோவிந்தா கதாப்பாத்திரத்தை கார்த்திக் செய்வதாக அறிகிறேன். பாவம்.

படத்தில் நான் மிகவும் எதிர்பார்த்தது, மணிரத்தினத்தின் இராமாயண interpretation ஆனால் அப்படி ஒன்று மணிரத்தினத்திடம் இருந்து எதிர்பார்க்கக்கூடாது என்று முந்தைய பிரதிகளில் இருந்து எனக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் கொடுமைக்கு நாம் விஜய் இடமே கூட சரி இந்தப் படத்தில் ஏதாவது இருக்கும் என்று ஒவ்வொரு படத்திற்கும் செல்பவர்கள், மணிரத்தினத்திடம் எதிர்பார்க்கக்கூடாது என்று ஒன்றும் இல்லை.

இராமாயணத்திலிருந்து மொத்தமாக பிறழாமல் ஆனால் இராவன் சீதைக்காக இராமனை விட்டுவிடுவது போலவும், சீதைக்கான இராவன் மீதான பிடிப்பு மட்டும் மணிரத்தினத்தின் interpretation ஆக ஒப்புக்கொள்ள முடியவில்லை, Mr. and Mrs. Iyer படம் இப்படியான ஒன்றை முதலிலேயே அளித்திருக்கிறது. கடைசி வரையிலும் சீதையை இராவன் தொடவேயில்லை என்பது கம்பனுடைய interpretationன் பாதிப்பு என்று நினைக்கிறேன். Mr. and Mrs. Iyer லெவலையே இன்னும் இராவன் தாண்டலை இந்த விதத்தில் என்று நினைக்கிறேன். Dev D அளவிற்கு வரும் என்று எதிர்ப்பார்ப்பதில் அர்த்தமில்லை.

நான் தேவ் டி பாணி படங்களையே இந்த விதத்தில் விரும்புகிறேன். இதன் காரணமாகவே எனக்கு ஓம்காராவும் ராஜ்நீதியும் பிடிக்காமல் போனது.

Wednesday, June 09, 2010

அன்புள்ள பாரீஸ்அன்புள்ள பாரீஸ்,
நீ கட்டினால் அழகாகுமே Sareeஸ்
உனக்கு இருப்பது தான் ஐஸ்
உன்னப்போல வருமா மாஸ்
கண்ணைத் தொறந்தா நீ
கண்ணை மூடி கனவைத் தொறந்தா நீ
நீ போட்ட புஷ்-அப்பு
நான் ஆனேன் ப்ரேக்-அப்பு
உன்னப் பார்க்க போனேன் நான் பப்பு
நானும் ஆவேனா பப் Lion பப்

Tuesday, June 08, 2010

தொடர்ச்சியற்ற எண்ணங்கள்

திருமண வாழ்க்கை நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது.

பெங்களூரில் மழை சீசன் என்பதால், எங்கள் கம்பெனியின் ப்ரீமியர் லீக் ஆட்டங்கள் தற்போதைக்கும் நிறுத்தப்பட்டிருக்கின்றன. கேப்டனாக விருப்பப்பட்டவர்களைத் தேர்ந்தெடுத்து பின்னர் கிரிக்கெட் விளையாட ஆசைப்படுபவர்களைத் தேர்ந்தெடுத்து, பெட்டிங் முறையில் கேப்டன்கள், தங்கள் வீரர்களை சேர்த்துக் கொண்டு ஒருவாறு அணிகள் முடிவாகிவிட்டது. இனி ஆட வேண்டியது தான் பாக்கி.

இனிமேல் பெண்ணியம் என்பது விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாய்டும். மொக்கைப் பெண்ணியைப் பதிவுகள் பெருக்கெடுக்கும். #ஜோசியம்

என்று நான் எழுதிய டிவிட்டைப் பற்றி நிறைய யோசித்துக் கொண்டிருக்கிறேன். அப்படியே வலையுலக மீடியேட்டர்களைப் பற்றி எழுதியதையும்.

# @peyarili இந்த மீடியேட்டர் பிரச்சனை ஒரு பெரும் பிரச்சனை. நானறியாத ஒன்றும் இல்லை, போலி டோண்டு விஷயத்தில் -நபர்- மீடியேட் செய்து கொண்டு இருந்த பொழுது இது எதிலுமே சம்மந்தப்படமால் நான் போட்ட பதிவிற்கு பிரச்சனை மீடியேட்டரிடம் இருந்த வந்தது. உண்மையிலேயே சம்மந்தம் இல்லாவிட்டாலும் கூட, நான் எதை எழுத எதை கூடாது என்று சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை என்று அன்று அந்த மீடியேட்டரின் தொடர்பைத் துண்டித்தேன். பிரச்சனை ஒரு பக்கம் இருக்க மீடியேட்டர்களின் அலப்பறை ரொம்ப ஜாஸ்தி. இதுதான் பிரச்சனை. இவர்கள் பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டு, நான் தான் சமாதானம் பேசிக்கொண்டிருக்கிறேனே. நீயேன் இடையில் என. வலையுலக பஞ்சாயத்துக்காரர்கள், உண்மையில் சினிமாவில் பத்திரிக்கைகளில் படிக்கும் பஞ்சாயத்துக்காரர்களின் அலும்பிற்கு குறையாயது. 7:18 PM Jun 3rd via web in reply to peyarili

வளமையாகவே திரைப்படங்கள் பார்த்துக் கொண்டு வருகிறேன், மொக்கையாக இருந்தாலும் வேறு வழியின்றி உடன் வரும் மனைவி இதுவரை க்ம்ப்ளெய்ண்ட் செய்யவில்லை. சொல்லிக்கொள்ளும் படியான படங்கள் எதுவும் தமிழில் ஆங்கிலத்தில் வரவில்லை. ராஜ்நீதி நன்றாக இருப்பதாக மசந்த் சொல்லி அறிகிறேன், போய் வரவும் ஆசை. Karate Kid படமும் பார்க்கவேண்டும், ட்ரைலர் நன்றாக இருக்கிறது, என் மனைவிக்கு பிடித்த படமாய் இருக்கலாம்.

ப்ரெஞ்ச் ஓபனில் ஃபெடரரையும் அதற்குப் பின் சோடர்லிங்கையும் சப்போர்ட் செய்து கொண்டிருந்தேன். பைனல்ஸ் ஸ்டெரெய்ட் செட்களில் முடிந்ததில் வருத்தம். விம்பிள்டன்னில் மீண்டும் ஃபெடரரின் க்ளாசிக் ஆட்டத்திற்காக காத்திருக்கிறேன்.

உலகக் கோப்பை கால்பந்தில் ஆரம்பத்தில் இருந்தே, ஜெர்மனிக்கு சப்போர்ட் செய்து வந்திருக்கிறேன். இப்பொழுதும் கூட, Miroslav Klose எனக்குப் பிடித்த ஆட்டக்காரர். பார்கலாம் இந்த முறை என்னாகிறது என்று. அர்ஜெண்டினா வரும் போலிருக்கிறது, ப்ரெசில் Vs அர்ஜெண்டினாவோ இல்லை ஜெர்மனி Vs அர்ஜெண்டினாவோ எனக்குப் பிடித்த பைனல்ஸாக இருக்கும்.

Friday, June 04, 2010

என் பதிவுகளுக்கான தேவை

கடந்த ஒரு வருடத்தில் வெறும் பதிமூன்று பதிவுகளே எழுதியிருக்கிறேன் என்பது கொஞ்சம் திரும்பிப் பார்க்கும் பொழுது கொஞ்சம் ஆச்சர்யமாகவும் நிரம்ப சந்தோஷமாகவும் இருக்கிறது. எதற்கும் நான் அடிமையில்லை என்பதை கொஞ்சம் தீவிரமாகவே என்னிடம் பரிசோதனை செய்து வந்திருக்கிறேன். நம்புங்கள் ஒரு வருடத்தில் நான் தமிழ்மணத்திற்கு வந்ததை எண்ணி விட முடியும், ஆரம்பத்தில் பரிசோதனையாக ஆரம்பிக்காவிட்டாலும். பின்னர் அப்படி ஆக்கிக் கொண்டேன், விலகியிருக்க முடிந்திருக்கிறது. நானாய் பின் தொடரும் வெகுகுறைவான மக்களை ரீடரில் படித்ததுடன். ட்விட்டரில் இருப்பதால்/இருந்ததால் கொஞ்சம் விஷயம் தெரிந்திருந்தது.

ஆனால் இப்பொழுது என் ’பதிவு’களுக்கான தேவை முன்பை விடவும்/எப்பொழுதை விடவும் இப்பொழுது அதிகமாக இருப்பதாய் எனக்குப் படுகிறது. காரணம் தெரியவில்லை. தொடர்ச்சியாக எழுதலாம் என்றிருக்கிறேன். 2007ல் எழுதிய அளவிற்கு எழுத ஆசை தான். பார்க்கலாம்.

...no matter how many fish in the sea it'd be so empty without me...