In Being Mohandoss உலகக்கோப்பை ஜெர்மனி ஸ்கார்ப்பியோ ஓட்டும் பெண்கள்

தொடர்ச்சியற்ற எண்ணங்கள்

செப்புப்பட்டயம் என்கிற பெயரில் எழுதிக் கொண்டிருந்த என் பதிவுகளை Being Mohandoss என்று மாற்றியிருக்கிறேன்.

ஜெர்மனி உலகக்கோப்பை கால்பந்தில் காலிறுதி வரை வந்ததிருக்கிறது. Klose 12 கோல்களுடன் பீலேவுடன் சமநிலையில், இன்னும் வந்திருக்க வேண்டும். ரெட் கார்ட் கொடுத்த மேட்சும் அதற்காக விளையாடாமல் போன அடுத்த மேட்சும் தடுத்துவிட்டது. ஆனால் என்ன பைனல்ஸ் வரை ஆடினால் 15 நிச்சயம் வரும்.

ஒரு வாரமாய் மத்திய பெங்களூரில் இருந்து விளிம்பு வொய்ட் பீல்ட் சென்று வரும் பொழுது மக்களின் டிரைவிங் ஹெபிட்ஸ் பற்றி நிறைய யோசித்தேன். ரோட்டில் வண்டி ஓட்டுவதில் பெரும்பிரச்சனை வருவது இரண்டு நபர்களால் ஒன்று By default: பெண்கள். மற்றையது நடுவயது ஆண்கள். இவர்கள் இளைஞர்களாகவும் இல்லாமல் முதியவர்களாகவும் இல்லாமல் இருப்பதால் பிரச்சனை, விட்டுத் தர முடியாத பிரச்சனை, ஓட்டிக் கொண்டிருக்கும் வண்டியை ‘ரோட்டின் ஆவரேஜ்’ வேகத்தில் ஓட்ட முடியாததும் அப்படி ஓட்டுபவர்களுக்கு இடம் கொடுத்து ஒதுங்க முடியாததுமான ஈகோ பிரச்சனை. பெண்ணாகப் பிறந்திருக்கலாம், ரோட்டில் வண்டி ஓட்டிக் கொண்டு வந்தால், நாய் முதற்கொண்டு, பக்கத்தில் வர பயப்படுகிறது. ஆராமாய் வீட்டிற்குப் போகலாம். காசிறுக்கிறது என்று ஸ்கார்ப்பியோ ஓட்டும் பெண்களால் அலறிக் கொண்டிருக்கிறது பெங்களூர் ரோடுகள். அன்றைக்கு சிக்னல் ஒன்றில் ஸ்கார்ப்பியோவின் ரிவ்யூ மிரரில் லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டிருந்த பெண்ணைப் பார்த்தேன். என்ன தவம் செய்தனை, ஸ்கார்ப்பியோ!

பெங்களூரில் பிரா அணியாமல் ஆடை அணியும் பெண்களை சாலையோரத்தில் பார்க்கும் பொழுது தானாய்த் திரும்பும் கண்களை கட்டுப்படுத்த வேண்டியிருக்கிறது. கல்யாணமாகிவிட்டதும் நம் கண்கள் எங்கே திரும்புகிறது என்று பார்ப்பதற்காகவே பின்னால் உட்கார்ந்து வரும் மனைவி திரும்பியதைக் கவனித்து, கவனித்ததை கவனித்து அன்றிரவுக்குள் subtleஆக ஆப்படிப்பதால். இப்பொழுதெல்லாம் தலையைத் திருப்பாமல் ரசிக்கக் கற்றுக் கொண்டுவிட்டேன், மனைவிக்கு இந்தப் பதிவை படித்துக் காட்டாமல் இருக்கணும்.

Related Articles

14 comments:

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

தம்பி..

நீயும் ஆரம்பிச்சிட்டியா ஹஸ்பெண்டாலஜிய..?

வாழ்க வளமுடன்..1

மோகன்தாஸ் said...

அண்ணே,

வாழ்க்கை ஒற்றைப்படையில் இருந்து இரட்டையாய் மாறிய பிறகு, அவளின்றி அணுவும் அசையாத பொழுது, சுய புலம்பல்களில், சொறிதல்களில், டையரிக் குறிப்புக்களில் அவளில்லாமல் ஆவதில்லை.

நந்தா said...

ஓய்ய் டிராஃபிக் விஷயத்தில் நீர் இன்னும் மாறவே இல்லையா?

எப்படியோ அவளின்றி அணுவும் அசையாதுங்கற அளவுக்கு மாறனது வரைக்கும் சந்தோஷம்.

மோகன்தாஸ் said...

நான் மாற இதில் ஒன்றுமே இல்லை :(.

வண்டி ஓட்டுற பெண்கள் மாறணும், அது நடக்கும்னு தோணலை, அதான் புலம்பல்ஸ். பெண்கள் டிரைவ் பண்ணுற விஷயத்தில் மட்டும் எதுவுமே மாறலை.

மாற்றம் மட்டுமே மாறததுங்கிறதுக்கே ஆப்படித்துக் கொண்டிருக்கிறார்கள் பெண்கள்.

Mohan said...

//பெங்களூரில் பிரா அணியாமல் ஆடை அணியும் பெண்களை//

சில பெண்கள் பிரா மட்டுமே அணிந்தும் வலம் வருகிறார்களே,அவர்களை எப்படி சமாளிக்கிறீர்கள் :-)

மோகன்தாஸ் said...

Dopomine, Amphetomine, Oxytocin போன்ற சுரப்பிகளுக்கு நான் கல்யாணம் ஆன விஷயம் தெரியாமல் போகும் காரணத்தினால் வரும் பிரச்சனையில் பிரா போடாமலிருந்தால் என்ன பிரா போட்டிருந்தால் தான் என்ன?

சுரத்தல் தான் பிரச்சனை.

mythees said...

எனக்கும் அதே பிரச்சனைதான் பட் எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல பாருங்க ..........
ஐ யம் ஸ்டில் பாச்சலர்

mythees said...

அப்பறம் டெம்லேட்க்கான கம்மண்ட போட மறந்துட்டேன் .........

உசுரே போகுதே

உசுரே போகுதே

உதட்ட நீ கொஞ்சம்

கடிக்கையில................

Anonymous said...

நீர் இப்படியெல்லாம் எழுதுவதை வாசிக்ககூடாதுன்னுதான் தமிழ் வாசிக்கத் தெரியாத பொண்ணாப் பாத்து கல்யாணம் கட்டிகிட்டீரா ஓய்.
-மு.க-

பரிசல்காரன் said...

பெங்களூருக்குப் போகும்போது நானும் உங்களைப் போல அவஸ்தைப் பட்டிருக்கிறேன்..

அப்பறம்.. ஹி..ஹி..ஹி.. அந்த.. அந்த.. அந்த டெம்ப்ளேட் நல்ல்ல்லாருக்குங்க...!

மோகன்தாஸ் said...

mythees,

ஹிஹி. எல்லோருக்கும் இதே பிரச்சனை தானா. கல்யாணம் பண்ணிக்கோங்க இன்னும் சுவாரசியமா இருக்கும்.

மு.க,

இல்லை அவள் அத்தனை தூரம் தானாய் முன்வந்து பதிவுகள் படிப்பதில்லை. எப்பவாவது நான் எடுத்துக் கொடுத்து படிக்க வைப்பேன். அல்லது படித்துக் காண்பிப்பேன்.

பரிசல்,

நன்றி.

நாகை சிவா said...

:))) எண்ணங்கள் தொடரட்டும் ;)

Freelancer said...

எனக்கு தெரிஞ்ச வரைக்கும் பசங்கள்ளாம் கல்யாணம் ஆனத ஒரு added advantage-ஆக எடுத்துக்கறாங்கன்னு நினைக்கிறேன்.
கல்யாணத்துக்கு முன் ரொம்ப ஜொள்ளர்களா இருந்தா எங்க மாட்டுற figure-ம் மாட்டாம போயிருமோன்ற பயமா இருக்கலாம்...ஆனா post marriage back-up ready-ஆ இருக்குன்னு ஒரு தைரியம் போல...

மோகன்தாஸ் said...

சலோனி,

பெண்களுக்கே வரும் இயல்பான பய உணர்ச்சி. நான் புன்னகையுடன் படித்துக்/புரிந்துக் கொள்கிறேன்.