In விளம்பரம்

இரண்டு நிமிட ஆச்சர்யங்கள்

விளம்பரங்கள் பார்ப்பது என்பது எனக்கு எப்பொழுதும் பிடித்தமான ஒரு விஷயம், அக்காவிடம் இதற்காக திட்டு வாங்கிய நினைவுகள் கூட உண்டு. இரண்டு நிமிடங்களில் ஒரு அற்புதமான விஷயத்தை சொல்லிவிடும் பொழுது மனம் லேசானதைப் போல் உணர முடிகிறது. ஏறக்குறைய சமீபத்தில் வெளிவந்த எல்லா 'த்ரீ ரோஸஸ்' விளம்பரமும் எனக்கு பிடித்தமான ஒன்று. மெல்லியதான ஒரு ஆணாதிக்க உணர்வு இந்த விளம்பரங்களில் என்னை மிகவும் மனதிற்கு நெருக்கமாக ஆக்கிய ஒன்று. ஆரம்பத்தில் இருந்தே இந்த விளம்பரங்களைப் பார்த்து வருகிறேன், அந்த செட் ஆஃப் விளம்பரங்கள் எங்கேயும் கிடைக்குமா தெரியவில்லை வீடியோவாக?

எப்பொழுதாவது படிக்க நேர்கிற அழகான ஹைக்கூ கவிதை போல் கடைசியாக வெளிவந்த 'த்ரீ ரோஸஸ்' விளம்பரம். கணவன் மனைவிக்காக வாங்கி வந்த தோடுகளை பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிக் கொண்டே தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியை எழுப்பிக் காட்ட, வந்த மலர்ச்சியை/ஆச்சர்யத்தை மறைத்துக் கொண்டு, பிறந்த நாள் அடுத்த மாசம் என்று சொல்லும் மனைவி பின்னர் ஒரு நாள் அம்மா வீட்டிற்கு கிளம்பும் பொழுது தான் கட்டியிருக்கும் சேலை எப்படியிருக்கு என்று கேட்க பரிதாபமாய் முகத்தை வைத்துக் கொண்டு கணவன் நல்லாயிருக்கு ஆனால் போன தடவையும் இதைத் தான் கட்டினாய் என்று சொல்லும் பொழுது, மனைவி சட்டென்று கோபமடைந்து திரும்பி பின்னர் கணவரைப் பார்த்து அழகாய் சிரித்து தேங்க்ஸ் சொல்லும் பொழுது, கவிதை, கவிதைன்னு நான் எழும்பிக் குதித்துக் கொண்டிருந்தேன் டிவியின் முன். இது ஒரு உதாரணம் மட்டுமே ஏறக்குறைய எல்லா 'த்ரீ ரோஸஸ்' விளம்பரங்களும் இதே வகையான ஹைக்கூக்களே. தொடர்ச்சியாக இப்படி அழகான ஹைக்கூக்களை நான் ஒரு கவிஞர் எழுதிக் கூட பார்த்ததில்லை. த்ரீ ரோஸஸ் கான்செப்ட் செய்பவரைப் பார்த்து ஒரு 'ஹாய்' சொல்ல வேண்டும் போலிருக்கிறது.இந்த விளம்பரம் இன்னொரு அழகு, ஒரு அழகான சிறுகதைக்கான இன்ஸ்பைரேஷன்.இதைப் போலவே கொஞ்ச காலம் முன்னால் வந்த 'Tata Sky'ன் அமீர்கான் விளம்பரமும் அப்படியே. அந்த செட்டில் வந்த முதல் விளம்பரம், அமீர்கான் தன் பெண்டாட்டிக்காக என்னவெல்லாமோ செய்துவைப்பார்; பார்க்க இயல்பாய் இருக்கும் கடைசியில் அன்றைய இரவு மேட்சிற்கான ஏற்பாடு அது என்று தெரியவரும் பொழுது ஒரு அழகான புன்னகை பரவும் உதடுகளில். அந்த விளம்பரத்தில் அமீர்கான் மற்றும் அவர் மனைவியாக வரும் குல் பனாக்கின் உணர்ச்சி வெளிப்பாடு அருமையாக இருக்கும். கடைசியில் "ச்சலோ ஜாவ் ஜாக்கே சாய் பனாக்கே லாவ்!" ஹைக்கு கவிதையின் ஆச்சர்யப் பகுதி!தற்சமயம் ஓடிக்கொண்டிருக்கும் Airtelன் விளம்பரமும் அப்படித்தான்.ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அந்தப் பையனின் தாயாக வரும் கதாப்பாத்திரம் அழகாக(?!) இல்லாததைப் போல் ஒரு வருத்தம் இருந்தது எனக்கு. ஆனால் கடைசியில் "பாப்பாகா ஃபோன் ஆயாத்தான்னா?" என்று அந்த குட்டீஸ் கேட்கும் பொழுது அவன் கையில் இருக்கும் பொம்மை ஃபோனைப் பார்த்து மெதுவாய் புன்னகைத்துவிட்டு நகரும் பொழுது. அருமை. இன்னொரு கவிதை.

HDFC Childrens Plan விளம்பரமும் சட்டென்று மனதைக் கவர்ந்த ஒன்று, தொடர்ச்சியாய் செல்லும் தியேட்டர்களில் எல்லாம் போட்டாலும் இன்னமும் மனதைக் கவர்ந்த ஒன்று.

இதில் ஒரு விஷயம், அந்த நான் சொன்ன எல்லா த்ரீ ரோஸஸ் விளம்பரங்களிலும், HDFC விளம்பரத்திலும் நடிக்கும் அந்தப் பையன் துள்ளுவதோ இளமையில் தனுஷுடன் நடித்த பையனாமே! ஆச்சர்யம்! என் அக்கா புருஷன் சொல்லப்போய் தான் எனக்கு தெரிய வந்தது. அந்தப் பையனின் உணர்ச்சி வெளிப்பாடு எனக்கு மிகவும் பிடித்ததாய் இருக்கிறது. கன்கிராட்ஸ் ட்யூட். இந்த இரண்டு நிமிட ஆச்சர்யங்களுக்கு/கவிதைகளுக்கு பின்னால் நிற்பவர்களுக்கு ஒரு குட்டி சல்யூட். நின்றபடியே, சின்னதாய் ஒரு Stand up Ovation.

Related Articles

30 comments:

என். சொக்கன் said...

மிக நல்ல தேர்வுகள் - நன்றி :)

ஒரே ஒரு அப்ஜெக்‌ஷன் யுவர் ஹானர் - அந்த ஏர்டெல் விளம்பரம் ஏனோ எனக்குப் பிடிக்கவே இல்லை - இன்னும் கொஞ்சம் சின்ன வயதுப் பையனாகக் காட்டியிருந்தால் ரசித்திருக்கலாமோ என்னவோ - இந்த விளம்பரத்தில் வரும் வயதுப் பிள்ளைகளுக்கு நிஜ ஃபோனுக்கும் பொம்மைக்கும் வித்தியாசம் தெரியாது என்றால் நம்புவதற்கு ரொம்பச் சிரமமாக இருக்கிறது :)

- என். சொக்கன்,
பெங்களூர்.

சென்ஷி said...

:-))

எல்லாமே கலக்கல் விளம்பரம் தாஸ்..

அமீர்கான் நடிச்ச விளம்பரம் ரொம்ப பிடிச்சிருக்குதுன்னு சொல்றீங்கன்னா கூடிய சீக்கிரம் விவாஹ ப்ராப்திரஸ்து வா :-))

மதுவதனன் மௌ. said...

ஒவ்வொரு சலனப்படங்களையும் நன்றே அனுபவித்தேன்.. உங்கள் அனுபவித்தெழுதிய விளக்கத்துக்கும் நன்றி

மதுவதனன் மௌ (Aka) கௌபாய்மது

மோகன்தாஸ் said...

சொக்கன்,

நான் உணர்ந்த வரையில், பொம்மை ஃபோனுக்கான வித்தியாசம் அந்தப் பையனுக்கு தெரிந்து தான் இருக்கிறது.

ஆனால் ஒரு நம்பிக்கை, 12வது படிக்கும் வரை சாமி கும்பிட்டுவிட்டு பரிட்சை எழுதினால் பாஸாவேன் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது. சாமியா பாஸ் பண்ணிவிட்டார்? ஆனால் நமக்கு ஒரு குறுகுறுப்பு இருந்திருக்கும். கடவுள் உதவினார்னு அது போலத்தான் இதுவும் என்று நான் நினைக்கிறேன்.

மோகன்தாஸ் said...

சென்ஷி,

நன்றிகள். வயசாகிட்டே போகுது, இனி அடுத்தது என்ன? கல்யாணம் தான் ;)

மோகன்தாஸ் said...

மதுவதனன்,

நன்றிகள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இந்த விளம்பரங்கள் இங்கு பார்க்கக் கிடைப்பதில்லை.
ஒரு சந்தேகம் இந்த விளம்பரம் பார்த்து இப்பொருட்களை வாங்க வேண்டுமெனும் உணர்வு
உங்களுக்கு ஏற்பட்டுள்ளதா??
இது வரை எனக்கு எந்த விளம்பரத்தையும் பார்த்து பொருளை வாங்க வேண்டுமெனும் ஆசை
மேலிட்டதில்லை.

மோகன்தாஸ் said...

யோகன்,

இல்லை விளம்பரம் பார்த்து பொருள் வாங்குவதில்லை என்றாலும், டீத்தூள் வாங்கப் போகிறேன் என்றால், த்ரீ ரோஸஸ் நினைவில் நிச்சயம் வரும். ஏன் என்றால் நாங்கள் வாழ்க்கையில் உபயோகிக்கும் பொருட்களில் இதுவும் ஒன்று.

அந்த வகையில் விளம்பரம் மக்களை பொருள் வாங்க இழுக்கிறது என்று தான் சொல்வேன். ஆனால் depends.

Anonymous said...

தமிழ் மண் குடத்தில் வந்ததற்கு வாழ்த்துகள்!!

ஆணாதிக்கம் நிறைந்த த்ரீ ரோசஸ் விளம்பரங்களை ஆதரிக்கும் உனக்கு ஒரு பெண்ணியவாதியாக அமைந்து உன் வாழ்க்கை வளம் பெற என் நல்வாழ்த்துகள்!! (அப்பாடா!!)

மோகன்தாஸ் said...

உங்களுக்குப் பொறாமை நிறைய பேர் எனக்கு வாக்களிக்கிறாங்கன்னு ;).

என் கல்யாணதுக்கு உங்களுக்கு நிச்சயம் பத்திரிக்கை உண்டு அப்ப பேசிப்போம் பெண்ணியப் பெண்டாட்டி பற்றி.

அன்புடன் அருணா said...

மிக நல்ல ரசனை உங்களுக்கு!!
அன்புடன் அருணா

Suresh said...

haa haa arumaiana vilambarangal yerkanavae parthu irunthalum oru alagiya pungai varamal illai :-) ungallukku ennoda puthandu nal valthukal thodranthu alagai :-) eluthugnal ungal rasanaikku periya kaithattu

ராம் said...

என்ன.... ஹிந்தி தெரிஞ்சிரிந்தா நல்லாருந்திருக்கும்

Suresh said...

i am following u for this amazing post thalai

கோபிநாத் said...

கலக்கல் விளம்பரங்கள்...TATA & bajaj விளம்பரங்களும் கலக்கலாக இருக்கும்.

Airtel அந்த குட்டி பையன் சூப்பரு..இந்தி தான் இடிக்குது எனக்கு ;)

வாக்காளன் said...

ஐயா இந்த பதிவுக்கோ +,-, இல் 49-O போடும் இடம் எங்கே...பூத் காப்சரிங் கேள்விப்பட்டிருக்கேன் ஆனா இங்கே 'பூத்தை'யே காணோமே??? blink blink

மோகன்தாஸ் said...

வாக்காளன்,

ரொம்ப நாளை அதைத் தான் நானும் தேடிக்கிட்டிருக்கேன். ;)

கண்டுபிடிச்சா மறக்காம சொல்லுங்க.

அம்பையர் said...

சேவாகு கைல யாருப்பா பேட்டு குட்தது. இது கல்லி கிரிக்கெட்டு, ஒரு பால்ல அவரு 100 ரன் அடிப்பாருடா...

நட்புடன் ஜமால் said...

விளம்பரத்துகு இவ்வளவு விமர்சணமா

அருமை.

என். சொக்கன் said...

மோகன்தாஸ்,

//பொம்மை ஃபோனுக்கான வித்தியாசம் அந்தப் பையனுக்கு தெரிந்து தான் இருக்கிறது. ஆனால் ஒரு நம்பிக்கை//

இது முழுக்க முழுக்க ஏற்றுக்கொள்ளும்படியான கோணம். பகிர்ந்தமைக்கு நன்றி :)

- என். சொக்கன்,
பெங்களூர்.

ஹரன்பிரசன்னா said...

கூல். கல்யாணம் ஆனா சரியாயிடும்.

வழிப்போக்கன் said...

இந்த விளம்பரங்கள் சூப்பர்...
கலக்கி இருக்காங்கல்ல...
:)))

Anonymous said...

எலே மக்கா

உனக்கு இன்னைக்கு வாக்களிக்குறவங்க்தான் நேத்து எனக்கும் வாக்களிச்சாங்க :-)திரும்பவும் நாளைக்கு எனக்காக வாக்களிக்காம போயிடுவாஙகளா என்ன?:-)

கலயாணமானா சரியாயிடும்னு ஒரு அனுபவஸ்தர் சொல்றாரு பாரு. பாவம் மனுசன் :-) கவிதை கூட எழுதுறதில்ல போல. அந்தளவுக்கு பூரண குணம் அடைஞ்சிட்டாரு. அப்ப நீயும் சரியாயிடுவேன்னு நம்பிக்கை இருக்கு :-)

Joe said...

'Tata Sky'ன் அமீர்கான் விளம்பரம் எனக்கு மிகவும் பிடித்த விளம்பரம்.
முதல் முறை பார்த்த போது, ஹிந்தி வாக்கியங்கள் அவ்வளவாக புரியவில்லை.

தொல்லைக்காட்சி நிகழ்ச்சிகளை விட விளம்பரங்கள் பல நன்றாகவே இருக்கின்றன.

ஜீவா said...

மோகன் தாஸ் நண்பரே! விளம்பரம் என்பது ஒரு மிகப்பெரிய கலை அதை நமக்கு மனதில் ஒரு சில நிமிடத்தில் புரியவைத்துவிடுகிறார்கள், நீங்கள் ஹைக்கூ கவிதையை ரசிப்பவர்தானே அதனால் உங்களுக்கு இந்த விளம்பர ரசனையைப்பற்றி சொல்லவா வேண்டும், அருமையாக இருந்தது, பாராட்டுக்கள்
அன்புடன் ஜீவா

பனங்காட்டான் said...

ஏர்டெல் விளம்பரம் மிக அருமை. அதிலும் அந்தச் சிறூவன் சோகமாக அமர்ந்திருக்கும் காட்சி மனதை ஏதோ செய்கிறது. இப்போது தமிழிலும் வர ஆரம்பித்து விட்டது, பார்க்கவில்லையா?

Sasirekha Ramachandran said...

நல்ல தேர்வு!!!

தமிழ் மண் குடத்தில் வந்ததற்கு வாழ்த்துகள்!!!

கார்த்திக் said...

SBI எல்லா விளம்பரங்க்ளும் எனக்குபிடிக்கும்.
அதிலும் அந்த தாத்தா வைரம் பரிசளிக்கும் போது.பாட்டி இந்த வயசுல எனக்கு எதுக்கு வைரமெல்லாம்னு கேப்பாங்க.தாத்தா அட வைரத்துக்கு உன் வயசு தெரியவா போகுதுன்னு சொல்லுவாரு.

அதிலையும் AXNல முந்தி ஒரு நிகழ்ச்சி போடுவாங்க.Most banned adsனு உல்கத்துல தடை செய்யப்பட்ட விளம்பரங்கள் நல்லா காமடியா இருக்கும்.அதையும் தடை பண்டிட்டாங்க.

Anonymous said...

Even I feel amazed to see few ads. But, these ppl kept telecasting them often and i get sick of them. some ads are just crap. I like amir khan;s one the most.

ஜெயசங்கர் - நைஜீரியா said...

இதை போன்ற விளம்பரங்களை இங்கே பார்க்க முடியவில்லை. அணைத்து விளம்பரங்களும் மிக அருமை. உங்கள் ரசனை ரசிக்க கூடியது. உங்கள் படியுகளை சிலவற்றை படித்தேன். மிக அருமை. ஜெயசங்கர் - நைஜீரியா