In சிறுகதை முதலிரவு முதலிரவு கதைகள்

இரண்டாவது முதலிரவு

யாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூலம் விடியற்காலையில் தூங்கிக் கொண்டிருந்த சுயத்தை, உணர்ச்சி நரம்புகளை மீட்டி எழுப்பிவிட்டிருந்தாள் என் அன்பு மனைவி. திருமணம் முடிந்து ஏறக்குறைய ஒரு வருடம் ஓடியிருக்கும் நிச்சயத்தார்தத்தின் பொழுது பார்த்ததற்கும் இப்போதைக்குமான வித்தியாசம் அதுவரை தெரிந்து கொண்டிருந்த நட்சத்திரங்கள் மழை மேகம் சூழ்ந்ததும் இல்லாமல் போவதைப் போல இருந்தும் இல்லாதது போலவே இருந்தாள். மழை மேகம் கலைந்த சமயத்தில் தெரிந்தது அவள் கொஞ்சம் போல் பூசினதைப் போலிருந்தது மட்டும் தான்.இந்த வாரத்து கோட்டா வேறு ஏற்கனவே முடிந்திருந்ததால் மீண்டும் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு சுயத்தை சாந்தப்படுத்திக் கொண்டிருந்தேன், அப்படியெல்லாம் சாந்தமாகிற விஷயமா சுயம் ஆனால் வேறு வழியில்லை. அதற்கான காரணம் கொஞ்சம் வழமையானது தான், அவள் கேட்காமலேயே அவளுக்கு உதவுகிறேன் பேர்வழியென்று நான் கல்யாணம் ஆனபிறகு மோகக் கிறுக்கெடுத்த அணையொன்றில் அத்தனை நாள் கட்டி வைத்திருந்த தண்ணீர் மடை திறந்ததும் பொழியும் வேகத்துடன் முப்பது நாட்களுக்குள் செய்த அட்டகாசங்கள் தான் காரணம். காபி போட்டுத் தருகிறேன், காய் கறி நறுக்கித் தருகிறேன், சனி ஞாயிற்றுக்கிழமைகளில் நானே சமைக்கிறேன், வீடு கூட்டுகிறேன் என்று நான் செய்த அலும்புகளில் கொஞ்சம் அவள் ஆடிப் போயிருந்தாள், இன்னும் கொஞ்சம் கொடுமை சேர்க்க பிறந்தநாளுக்கு அவளை ஆச்சர்யப்படுத்த, அவளுக்கு தெரியாமல் பல ஆயிரம் கொடுத்து பட்டுபுடவை வாங்கறேன் என்று, இப்படிப் பல.

ஆனாலும் அடங்க மறுத்த சுயம் கூடாரத்திற்குள் புகுந்த ஒட்டகமென விஸ்வரூபமெடுக்க அவள் மண்டியிட்டு கட்டிலில் தேடிக்கொண்டிருந்த வாக்கில், இடுப்பில் கைவைத்து இழுத்தேன், தவறி என்மேல் விழுந்தவள் ஒன்றுமே சொல்லாமல் தன்னை விலக்கிக்கொண்டாள். என்னால் நம்பவேமுடியவில்லை, வேறொரு சமயம் நான் இப்படி செய்திருந்தால் தலையில் நறுக்கென்று கொட்டியோ, இல்லை வெகு அழகாய் பராமரித்து வைத்திருக்கும் விரல்நகத்தால் கிள்ளியோ, எதிர்ப்பை காட்டியிருப்பாள். அதுவும் இல்லையென்றால் நிச்சயமாகத் திட்டித்தீர்த்திருப்பாள் ஆனால் இன்று எதுவும் நடக்கவில்லை.

ஒருவேளை மௌன விரதம் இருக்கிறாளோ? இருக்காதே! அவளது வீட்டில் இருக்கும் பொழுது வாரத்திற்கு ஒரு முறையோ, மாதத்திற்கு ஒருமுறையோ மௌன விரதம் இருப்பது பழக்கமேகவேயிருந்தாலும். திருமணம் முடிந்தபிறகு என்னைத் தயார்ப்படுத்தி(!) அலுவலகம் அனுப்பவேண்டுமானால் இதெல்லாம் உதவாது என வந்த சில வாரங்களிலே புரிந்து கொண்டதால், மௌன விரதமே இருப்பதில்லை என ஒரு அழகான சாயங்கால வேளையில் என்னிடம் சொல்லியிருந்தாள்.

விலகிப்போனவள், நேராய் சமையலறைக்குப் போய் காப்பி கலக்கிக் கொண்டு வந்து கொடுத்தாள், நான் உண்மையிலேயே பயந்துவிட்டேன் அவளுக்கு என்னவோ ஆகிவிட்டது என நினைத்து. எக்காரணம் கொண்டும் பல் விளக்காமல் காப்பி தரவேமாட்டாள் ஷைலு. முதலிரவு முடிந்த அடுத்தநாளே இந்தப் பழக்கத்தை ஆரம்பித்து வைத்தவள் அவள். அன்று காப்பி எடுத்துவந்த அம்மாவிடம் செல்லமாக கோபித்து, அன்றிலிருந்து நான் பல்விளக்கியதும் தான் காப்பி சாப்பிடும்படி வைத்தவள் அவள். இதற்கு சில விதிவிலக்குகள் உண்டென்றாலும், இன்றெய்க்கெப்படி என்பது தான் புரியவில்லை. பெரும்பாலும் இரவு அதிகம் வேலையிருந்து பின்னிரவில் வீட்டிற்கு வந்தால், அடுத்த நாள் காலையில் பெட்காபி கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

அதுவும் நான் அருகில் இருக்கும் சமயத்தில், எனக்கு கொடுத்துவிட்டு தான் சாப்பிடுவது என்று ஏதோ கொள்கை வைத்திருந்தாள். அது போன்ற நாட்களில் நான் பல்விளக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வேன் என்பது தான் முக்கியகாரணம். காப்பி கொடுத்துவிட்டு நகர்ந்தவள் நேராய் உள்ளறைக்கு போய் பீரோவை உருட்டிக்கொண்டிருந்தாள். நானே நினைத்தாலும் இன்று அவளுக்கு உதவ முடியாது, அலுவலகத்தில் ஒரு முக்கியமான மீட்டிங் இருந்தது அன்று. அதனால் ஒரே இழுப்பில் காப்பியை விழுங்கிவிட்டு, குளிக்கக்கிளம்பினேன்.

குளியலறைக்கு அருகில் சென்றிருப்பேன், உள்ளறையில் இருந்து யாரோ அழுவது போல் சத்தம் கேட்டது. என்னடா இது நம்ம வீட்டில யார் அழுவது? ஒரு வேளை ஷைலுவோ? இருக்காதே கல்யாணம் ஆனதிலிருந்து இன்று வரை அவள் அழுததேகிடையாதே? பிரம்மையாயிருக்கும்னு நினைத்தேன். ஆனால் சப்தம் விடாமல் கேட்க, எனக்குள் ஒரு பரபரப்பு வந்து என் அழகு மனைவி அழும் அழகை பார்க்க உள்ளே சென்றேன். ஷைலஜா தான் பீரோவிற்குள் தலையை விட்டுக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள். நான் அருகில் சென்று நிற்க, திரும்பியவள்.

என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டு என் தோளை நனைக்கத் தொடங்கினாள். உடனே நான்,

"என்ன ஷைலு இது சின்னப்பிள்ளையாட்டம். என்ன ஆச்சு எதுக்கு அழுவுற?" கேட்டதும்.

"பாவா தாலியைக் காணோம்?" மெதுவாக வார்த்தை வார்த்தையாக சொல்லி முடித்தாள்.

எனக்கு புரிந்தது, ஆனாலும் அவள் பாவான்னு கூப்பிட்டதும் வந்த சிரிப்பையும் அடக்கிக்கொண்டு, கோபம் வந்தவனைப்போல், அவள் தோளைப்பிடித்து என்னெதிரில் நிறுத்தி,

"என்னது தாலியைக் காணோமா? விளையாடுறியாடி நீ, இல்லை விளையாட்டுப் பொருளா அது? தொலைச்சுட்டேன்னு அழுதுக்கிட்டு நிற்க? புதுப்பொண்டாட்டியாச்சேன்னு கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம்னு பார்த்தால். இதெல்லாம் ரொம்ப ஓவர். நானெல்லாம் இந்த பெங்களூர் ரோட்ல வண்டி ஓட்டுறேன்னா, ஏதோ பெண்டாட்டி கழுத்தில கட்டியிருக்கிற தாலி மேல பாரத்தைப் போட்டுட்டுதான். இப்படி நீ தாலியை வைச்சிக்கிட்டெல்லாம் விளையாடிக்கிட்டிருந்தால் எப்படி வண்டி ஓட்டுறது? உயிரோட வீட்டிற்கு வர்றது?" நான் கேட்டு முடிக்க, அதுவரை மெதுவாக அழுது கொண்டிருந்தவள் தேம்பித்தேம்பி அழத்தொடங்கினாள்.

எனக்கு ஷைலஜாவைப்பற்றி நன்றாகத் தெரியும், இடையில் ஒருமுறை ஒரு செய்தி வாசிக்கும் பெண், தான் தூங்கும் பொழுது தாலியை கழட்டி வைத்துவிட்டுத்தான் தூங்குவேன்னு சொல்ல, நான் ஷைலஜாவிடம் "ஏண்டி நீயும் கலட்டி வைச்சிட்டு தூங்கலாம்ல ஒரே தொந்தரவா இருக்கு"ன்னு சொல்லப்போக அடுத்த நாள் முழுவதும் அவள் என்னிடம் முகம் கொடுத்து பேசவில்லை, எனக்கு இதிலெல்லாம் சுத்தமாக நம்பிக்கையில்லா விட்டாலும் அவள் வீட்டில் வளர்த்தது அப்படி. இரண்டு
நாள் அதற்கு பிறகு நல்லா டோஸ் கொடுத்துட்டுத்தான் சரியாவே பேசத்தொடங்கினாள்.

நான் விளையாட்டிற்காக அவளிடம் இப்படி பேசப்போய் அவளுடைய அழுகை அதிகமானது. ஆரம்பத்தில் முதல் முறை அவள் அழுவதைப் பார்த்த பொழுது வேடிக்கையாய் இருந்தாலும் கொஞ்ச நேரத்தில் எனக்கு மிகவும் சங்கடமாகிவிட்டது. பாலகுமாரன் நாவல்கள் படித்துவிட்டு கட்டிய மனைவி அழுதால் அது எனக்கு அவமானம் என்ற கொள்கையெல்லாம் இருந்தது என்னிடம், அதெல்லாம் எங்கே போனது என நினைத்துக்கொண்டே, நகர்ந்து பக்கத்தில் இருந்த ஹேங்கரில் கிடந்த என் பேண்ட் பாக்கெட்டுக்குள் கைவிட்டு தாலியை எடுத்து அவளிடம் கொடுத்தேன்.

அதைப் பார்த்ததும் மெதுவாய் அழுகை நின்றது,

"நீ நேத்தி நைட் நைட்டியை கழட்டும் பொழுது கீழே விழுந்திருக்கும்னு நினைக்கிறேன். நைட்டி கூடவே கிடந்துச்சு, பாத்ரூம் போக எழுந்திருச்சப்ப பார்த்தேன், சரி கால்ல படவேண்டாம்னு ஹேங்கரில் இருந்த பேண்டில் போட்டேன். காலையில எழுந்ததும் கொடுக்கலாம்னு நினைச்சேன், ஆனா எழுந்ததுமே சூழ்நிலை வேற மாதிரியா இருந்ததால மறந்திட்டேன்"னு சொல்லி அவளை பாவமேன்னு
பார்த்தேன். அதைப்பத்தி ஒன்னுமே சொல்லாம,

"சரி மாட்டி விடுங்க." சொல்லிவிட்டு திரும்பவும் என்கையில் தாலியை கொடுத்தாள். தாலியை தங்கத்தில் மாற்றி, பிறகு காசு, குண்டு இப்படி ஏகப்பட்ட விஷயங்களை சேர்த்திருந்ததால் தான் மாட்டி விடச்சொல்லி லேசாய் தலையை முன்பக்கமாய் சாய்த்திருந்தாள். நானும் கருமமே கண்ணாக மாட்டிவிட்டு நிமிர்ந்து பார்த்தேன். கழுத்தில் ஏறியதும் நிமிர்ந்து பார்த்தவள் ஒன்றுமே பேசாமல் சமையல் கட்டிற்குள் புகுந்து கொண்டாள். நானும் அவசர வேலையிருந்ததால் மேலும் ஒம்பிழுக்காமல் குளிக்கச் சென்றேன்.

குளித்துவிட்டு ஆடையெல்லாம் அணிந்துகொண்டு வந்து பார்த்தால், எப்பொழுதும் டைனிங் டேபிளில் சாப்பாடு ரெடியாக இருக்கும். இன்று ஒன்றையும் காணோம். கட்டிலில் உட்கார்ந்திருந்த அவளை பார்க்க பாவமாய் இருந்ததால் போனால் போகட்டுமென்று விட்டுவிட்டு, காலணிகளை அணிந்து புறப்பட தயாரானேன், அப்பொழுது தான் வெடித்தது அணுகுண்டு,

"இன்னிக்கு லீவு போட்டுறுங்க." எனக்குத்தான் உத்தரவு வந்தது.

"ஏன் இன்னிக்கு லீவு, அதெல்லாம் முடியாது. இன்னிக்கு ரொம்ப முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கு, லீவெல்லாம் போடமுடியாது. நான் போய்த்தான் ஆகணும்." சொல்லிக்கொண்டே சாக்ஸைப் போட்டேன்.

"அதெல்லாம் முடியாது, நாம இப்ப கோயிலுக்கு போகணும். அதனால லீவு போடுங்க."

"என்னம்மா இது ஒரு தடவை சொன்னா புரியாதா? முக்கியமான வேலையிருக்கு, கோயிலுக்கு போகணும்னா போய்ட்டு வா? எதுக்கு என்னைக் கூப்பிடுற. நீதான் கார் வோட்டுவல்ல, நம்ம காரை எடுத்துட்டு போய்ட்டு வா, நான் வேணும்னா ஆட்டோவில் போய்க்கிறேன்." சொல்லிவிட்டு இரண்டாம் காலில் சாக்ஸை மாட்டினேன். இதுவரை உட்கார்ந்திருந்தவள் எழுந்து நின்றாள்.

"இங்கப்பாருங்க நீங்கத்தான் சொன்னீங்க, தாலி என் கழுத்திலேர்ந்து கழண்டுட்டதால உங்களுக்கு ஆபத்து வரும்னு. எனக்கு பயமாயிருக்கு இன்னிக்கு வேலைக்கு போகவேண்டாம், சொன்னா கேளுங்க."

"அதான் திரும்ப மாட்டி விட்டாச்சுல்ல, எல்லாம் சரியா போயிரும்." இந்த நேரத்தில் இரண்டு கால்களிலும் சாக்ஸ் மாட்டிவிட்டதால் மெதுவாய் அவளை நெருங்கிவந்து, "அதுமில்லாம உனக்கே நல்லாத்தெரியும் எனக்கு இதிலெல்லாம் சுத்தமா நம்பிக்கை கிடையாது. உன்கிட்ட சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்."

"இங்கப்பாருங்க நீங்க விளையாட்டுக்காக சொன்னீங்களே இல்லை சீரியஸாய் சொன்னீங்களோ எனக்குத் தெரியாது, உங்களுக்கும் நல்லா தெரியும் எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை நிறைய உண்டு. அதுவுமில்லாம கோயிலுக்குப் போய் என் கழுத்தில் இன்னொரு தாலி கட்டுற வரைக்கும் உங்கள தனியா எங்கையும் போக நான் அனுமதிக்க முடியாது. உங்க வாய்லேர்ந்து வந்ததை நல்ல சகுனமா நினைக்கிறேன் நான். அதையும் மீறி நீங்க போய் உங்களுக்கு ஏதாச்சும் ஆய்சுன்னா. ம்†¤ம் என்னால முடியாது."

இதெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக தெரிந்தாலும், கண்கள் மீண்டும் காவிரியாய் திறந்துவிடும் அபாயம் தெரிந்ததால் வேறு வழி, அலுவலகத்திற்கு விடுமுறை சொல்ல செல்லிடைப்பேசியை நாடினேன். நான் இந்த முடிவுக்கு வந்ததுமே அங்கிருந்து நகர்ந்தவள். அடுத்த நிமிடத்தில் டைனிங்டேபிளை நிரப்பினாள். பசி வயிற்றைக் கிள்ளியதால் உடனே சாப்பிட உட்கார்ந்தேன். பரிமாறத் தொடங்கியவளிடம்,

"நீ சாப்பிடலை."

"இல்லை."

"ஏன்?"

"விரதம்." அதற்கு மேல் பதில் வரவில்லை அவளிடமிருந்து. சூழ்நிலையை கொஞ்சம் சரியாக்க நினைத்து, பரிமாறிக் கொண்டிருந்தவளின் இடுப்பில் கைவைத்தேன். கையைத் தட்டியும் விடாமல் வேறு உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாமல் ஹட்பேகையே பார்த்துக் கொண்டிருந்ததால், நானாக கையை எடுத்தேன். பிறகு சாப்பிட்டு முடித்ததும் தான் தாமதம்,

"போலாமா?" யாரையோ கேட்பது போல் கேட்டாள்.

"எங்க?"

"கோயிலுக்கு."

சரி இந்தப் பிரச்சனையை சீக்கிரமே முடித்தால் தேவலையென நினைத்து,

"சரி கிளம்பு." என சொல்லிவிட்டு கார் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.

இடையில் மறித்தவள், "நாம கார்ல போகல, நடந்துதான் போறோம்." சொல்லிவிட்டு என்னையே பார்த்தாள். கஷ்டகாலம் எல்லாம் என் வாயால வந்தது, அவளிடம் விளையாட்டுக்காய் சொல்லப்போக வினையாய் முடிந்தது, இனி எவ்வளவு சொன்னாலும் மாறமாட்டாள். தொலைஞ்சு போகுது ஒருநாள்னு நினைச்சிக்கிட்டே பக்கத்தில் இருந்த மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கிளம்பினேன்.

வீட்டை பூட்டிவிட்டு என்னுடன் நடந்து வரும் அவளைப்பார்க்க எனக்கு வருத்தமாய் இருந்தது. விளையாட்டுக்காய் செய்யப்போய் இவ்வளவு வருத்தப்படுகிறாளேன்னு நினைத்தால் கஷ்டமாகவும் இருந்தது. இனி எப்ப சாப்பிடுவான்னு வேற தெரியலை. உடனே சின்னதா ஒரு ஐடியா வந்தது. பக்கத்தில் உள்ள ஒரு நகைக்கடைக்கு நடந்தேன். முதலில் முறைத்துப் பார்த்தவள். பின்னர் பின்தொடர்ந்து வந்தால், போன வாரம் ஏதோ நெக்லஸ் கேட்டிருந்தால் என்னிடம் அதை வாங்கிக் கொடுத்து சிறிது சமாதானம் செய்யலாம் என்றுதான் அங்கு அழைத்து வந்தேன்.

கடைக்குள் வந்தவள் வாயை திறக்காமலே இருந்தாள், ஆனால் அந்த கடையில் காரியதரசியிடம் அவள் பார்த்துவைத்திருந்த அந்த நெக்லஸைப் பற்றிக் கேட்டேன். எடுத்துக் காண்பித்தவர்.

"சார் இப்பவே வாங்கிக்கப்போறீங்களா?" கேட்க,

"ஆமாம்." என்று சொல்லி டெபிட் கார்டை கொடுத்தேன். அம்மணி வாய் பேசாமல் என்னை அதட்டி மிரட்டாமல் இருந்தது அவருக்கு ஆச்சர்யம் அளித்திருக்கவேண்டும், ஆனால் இதுபோல எத்தனை தம்பதியைப் பார்த்திருப்பார். சிரித்துக்கொண்டே நகையை அவளை அழைத்து அவள் கையில் கொடுத்தார்.

வாங்கிக்கொண்டு நேராய் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தோம், வெளியி
லேயே அர்ச்சனைத்தட்டும் மஞ்சள் கயிரும் வாங்கியவள், அதற்கும் என்னை பணம் தரச்சொல்லிவற்புறுத்தினாள். நேராய் அம்மன் சந்நதிக்குப் போய் அய்யரிடம் கன்னடத்தில் பேசியவள் அர்ச்சனைத்தட்டைக் கொடுத்தாள். அர்சனையை முடிந்து அம்மன் காலில் வைத்த தாலியை என் கையில் கொடுத்த அய்யர் அவள் கழுத்தில் கட்டச்சொல்லி சைகை காட்டினார், நான் மெதுவாக மீண்டும் ஒருமுறை மூன்று முடிச்சு போட அவர் மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தார். பின்னர் அந்த நெக்லஸையும் மாட்டிவிட எல்லாம் சுபமாய் முடிந்தது.

பின்னர் பிரகாரத்தில் உட்கார்ந்து நான் தேங்காயை உடைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்க; பக்கத்தில் உட்கார்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்த அவள், சிறிது நேரத்தில் தோளில் சாய்ந்து கொண்டாள்.

"இனிமே விளையாட்டுக்குக் கூட அப்படி சொல்லாதீங்க பாவா." அவள் சோகமே வடிவாய்ச் சொல்லமீண்டும் அந்த பாவா என்ற சொல் எனக்கு சிரிப்பை உண்டாக்கியது.

எங்கம்மா எங்க நைனாவை பாவான்னு தான் கூப்பிடுவாங்க, ஆனா இவளும் அந்த
வகையறாதான்னாலும் அவங்க வீட்டில் அப்படி கூப்பிடுற பழக்கம் கிடையாது. அதனால் முதலிரவு முடிந்த அடுத்தநாள் இவள் என்னை பாவா, பாவான்னு கூப்பிட, எங்கம்மா என்னிடம் இதை நக்கலாய் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார்கள். அதாவது சொல்வது பாவான்னாலும் கூப்பிடற போது வாவான்னு வரும், ஆனால் இவளுக்கு பழக்கமில்லாததால் பாவான்னே கூப்பிட எங்கம்மா என்னிடம் நக்கலடித்துக்கொண்டிருந்தார்கள்.

அதை நினைத்து தான் நான் காலையில் சிரித்தேன், ஆனால் இப்பொழுது தான் ஒரு பிரச்சனை முடிந்திருந்ததால், அடுத்த பிரச்சனையை ஆரம்பிக்க விரும்பாமல் அமைதியாக இருந்தேன். ஆமாம் சாமியாய் தலையாட்டிக்கொண்டு. கொஞ்ச நேரத்தில் சரியானவள் அவள் குடும்பத்தில் நடந்த இதைப் போன்ற சம்பவங்களை பற்றி சொல்லிக்கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து கிளம்பும் வேளையில், காலணிகளை எடுக்க வந்த கடையில் அர்சனைக்காக வைத்திருந்த உதிரிப்பூவை ஒரு கூடையாக நான் கேட்டு வாங்க ஏனென்று கேட்டவளின் காதுகளில் மெதுவாய்,

"அதான் கல்யாணம் ஆய்டுச்சு, இன்னிக்கு முதல் ராத்திரிதானே அதான் வாங்கினேன்னு சொல்ல."

முகம் சிவக்க வெட்கப்பட்டவளாய் என்னை அடிக்க துரத்தினாள்.

Related Articles

46 comments:

 1. தலைவரே கையக் கொடுங்க.. சூப்பர் கதை :-) ஆமா கதையா இல்ல உண்மைச் சம்பவமா ???
  ***
  ஏதோ சோழ வரலாறு, பூட்டிபுல் மைண்ட், கிரிப்டோகிராபின்னு எழுதிக்கிட்டிருந்தீங்களா.. சரி நமக்கு இந்த இடம் ஒத்து வராதுன்னு இருந்தேன் :-)

  ReplyDelete
 2. இப்பிடி சொல்லீட்டீங்க பார்த்தீங்களா!!! சோம்பேறிப்பையன். என்ன இருந்தாலும் உங்க ஆதரவு அந்த பதிவுகளுக்கும் கிடைத்திருக்க வேண்டும் பரவாயில்லை.

  கதை கற்பனையே!!! :-)

  ReplyDelete
 3. எப்படிடா காசி இந்த பதிவை நீக்காம வச்சிருக்காருனு நெனைச்சு வந்தேன்... காரணம்...

  ஆரம்பமே சரியில்லையே.. ஒருவேளை, தமிழ்மணத்தில் முதல் வரியைப்பார்த்து வருவாங்கனு அப்படி எழுதுனீங்களா ??

  ReplyDelete
 4. யோவ் மோகந்தாஸ்... எப்படிய்யா இதெல்லாம்... சின்னஞ்சிறுசுக கட்டுன புதுசுல நடத்துற சந்தொஷங்களை நேர்ல பாத்தது போல அருமையா எழுதி இருக்கீங்க..

  //இந்த வாரத்து கோட்டா வேறு ஏற்கனவே முடிந்திருந்ததால் மீண்டும் கண்ணை இறுக்கமாக மூடிக்கொண்டேன்//

  அடப்பாவிகளா... இதுக்கு கோட்டா வேறயா?..

  நல்ல காதல் கதை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. குண்டு, காசு, கருப்பு எல்லாம் தாலிலே முழுசா யாரு கோக்குறாங்க, தங்க சங்கலில சாஸ்தரத்திக்கு நாலு குண்டு கோக்கறதோட போச்சு. "பாவா", இந்த வார்த்தையில எவ்வளவு கிறக்கம் இருக்குங்கிறத புதுசா கண்ணாலம் கட்டிப் பாத்த மாதிரி சொல்லுறீங்க! பாத்த அனுபவமம் மாதிரி தெரியலயே?

  ReplyDelete
 6. யாத்ரீகன், சிறுகதையின் தொடக்கத்திலேயே வாசகருக்கு ஆர்வத்தை கொண்டுவரவேண்டும் என்று யாரோ சொன்னதற்காக எழுதியது. அப்புறம் கதையைப்பத்தி ஒன்னுமே சொல்லலையே. :-)

  மூர்த்தி, ரொம்ப நன்றிங்கோ உங்கள் வாழ்த்துக்களுக்கு.

  வெளிக்கண்ட நாதரே, நன்றிங்கோ சொன்னா நம்புங்கோ பாத்துகூட எழுதினது கிடையாதுங்கோ முழுசா கற்பனைங்கோ. :-)

  ReplyDelete
 7. கலக்கிபுட்டீங்க் ராசா...!, சிருங்காரம் ததும்புது.

  >>//இந்த வாரத்து கோட்டா வேறு ஏற்கனவே முடிந்திருந்ததால் மீண்டும் கண்ணை இறுக்கமாக மூடிக்கொண்டேன்//

  அடப்பாவிகளா... இதுக்கு கோட்டா வேறயா?..<<

  பின்ன, வார சராசரி 2.5 அப்படின்னு கருத்துகணிப்புகள் சொல்லுதே.

  ReplyDelete
 8. ஆரம்பத்துலயே ஆர்வத்தை தூண்டுவது சரிதான்.. ஆனால் ஏனோ தெரியவில்லை.. இந்த கதையின் ஆரம்பத்தில்.. நீங்கள் கொடுக்கும் விவரித்தல் ஒரு நல்ல விதமான ஆர்வத்தைக் கொண்டுவருவதாக தெரியவில்லை...

  ஏதோ எனக்கு தோணுனதுங்க... வேறுபட்டால்.. விட்டுறுங்க...

  ReplyDelete
 9. கதை அதுக்கப்புறம் நல்லாவே இருந்துச்சு...

  esp பாவா description :-)

  அதை நான் மிகவுமே இரசித்தேன்..

  ReplyDelete
 10. யாத்ரீகன் மற்றும் பெத்தராயுடு நன்றிகள். யாத்ரீகன் இருக்கலாமுங்கோ அதனால் தான் மரத்தடியிலும் வலையேற்றலைன்னு நினைக்கிறேன். :-)

  ReplyDelete
 11. தல எப்டி இப்டியெல்லாம் யோசிக்கறீங்க ,

  பாராட்டுக்கள்

  குமரன்@முத்தமிழ்மன்றம்.காம்

  ReplyDelete
 12. இன்னும் பிப்ரவரி கூட வரலையே!! என்ன இதே மாதிரி கதையா மீள் பதிவாகிகிட்டிருக்கு?!!

  ReplyDelete
 13. ம்ம்ம்கூம், மோகன்தாஸ் ஜாதகத்தை ஒரு 50 காப்பி ஜெராக்ஸ் போடுங்கப்பா

  ReplyDelete
 14. //bhaga undhi//

  அனானிமஸ் ரொம்ப நன்றி.

  ReplyDelete
 15. //மங்களூர் சிவா said...

  Excellent Story//

  ரொம்ப நன்றிங்க சிவா!

  ReplyDelete
 16. //ம்ம்ம்கூம், மோகன்தாஸ் ஜாதகத்தை ஒரு 50 காப்பி ஜெராக்ஸ் போடுங்கப்பா//

  ஹாஹா, உண்மையில் நானே சொல்லணும்னு எழுதணும்னு நினைக்கிறேன் என் ஜாதகத்தைப் பத்தி.

  நினைவுபடுத்தினதுக்கு நன்றி.

  ReplyDelete
 17. super story ma......
  follow link குடுத்தா நல்லா இருக்கும்

  ReplyDelete
 18. சூப்பர் கதை........

  ReplyDelete
 19. Chanceless..Superb Narration...Thanks for a nice story
  - Manikandan

  ReplyDelete
 20. கடுப்பக் கிளப்புறாங்க...

  ReplyDelete
 21. மணிரத்னம் படம் பார்த்த ஒரு எஃபெக்ட் இருக்கு.. ம்ம்ம்ம் கலக்கல்

  ReplyDelete
 22. mythees, வசீகரா, கவிதை காதலன் - நன்றி

  ReplyDelete
 23. நல்லாயிருக்கு கதை!!!

  விவரித்த விதம் மிக பிடித்திருந்தது!

  ReplyDelete
 24. இரண்டு நாளா நீ செஞ்ச பாவத்துக்கு பரிகாரமா ஒரு மேட்டர் கதையை சீக்கிரம் போடு

  ReplyDelete
 25. "முதல் பகல்" னு சொல்லுங்க

  ReplyDelete
 26. Anony,

  செஞ்சிட்டாப் போச்சு.

  ReplyDelete
 27. சேக்காளி,

  நிச்சயம் சொல்லலாம்.

  ReplyDelete
 28. Butter_Cutter,

  நன்றிகள்.

  ReplyDelete
 29. அண்ணே! செம்ம... ஒரு வார்த்தையை கூட மிஸ் பண்ண விடாமல் படிக்கச் செய்யும் அழகான எழுத்து நடை!

  சென்னாங்கே இத்தே!

  VEDHALAM @TWITTER

  ReplyDelete
 30. தெரியாத சாலையில் யாரோ வழி சொல்லி கையைப் பிடித்துக் கொண்டு கூட்டிச் சென்ற உணர்வு! நல்ல கதை!

  ReplyDelete
 31. வேதாளம் நன்றிகள்.

  ReplyDelete
 32. நடராஜன் நன்றிகள்.

  ReplyDelete
 33. ஹா ஹா ஹா ஹா அசத்தல் கதை வாழ்த்துக்கள்....!!!

  ReplyDelete
 34. தலைப்பை பார்த்து அவசர அவசரமா படிச்ச நான் ஏமாறல

  ReplyDelete
 35. thalaiva arumaiyana kathai , onnorumurai sollunga

  ReplyDelete
 36. kadhai nallarukku sir.... Niraia nalla kadhaigal eludhanum... vaalga.. valarga....

  ReplyDelete
 37. அண்ணே கலக்கிட்டீங்க......... உங்களுக்கிட்ட இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்!!!!!!!!!!!!!! வாழ்த்துக்கள்;);)

  ReplyDelete
 38. அண்ணே கலக்கிட்டீங்க......... உங்களுக்கிட்ட இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்!!!!!!!!!!!!!! வாழ்த்துக்கள்;);)

  ReplyDelete

Popular Posts